» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கூட்டுறவு சங்கதேர்தல் : திமுக- காங் கூட்டணி கைப்பற்றியது

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 10:40:01 AM (IST)சுரண்டை கூட்டுறவு சங்க தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது

திருநெல்வேலி மாவட்டத்தில் 0280, சுரண்டை தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் 0.2099, சுரண்டை சிவகுருநாதபுரம் கூட்டுறவு பண்டகசாலை லிட் தேர்தலில் பதிவான ஓட்டுகள் நீதிமன்ற உத்தரவு படி எண்ணப்பட்டன. ஓட்டு எண்ணிக்கையின் முடிவில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர். 0.280, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் திமுக சார்பில் ரத்தினகுமார், சக்தி, மாரியப்பன், ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் வள்ளிமுருகன், பன்னீர் செல்வம், பிரபாகர் ஆகியோரும் வெற்றி பெற்றனர். 

ஏற்கனவே இந்திரா, சண்முகசுந்தரி, சங்கராதேவி, முருகையா, வேல்ச்சாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.0-2099 சுரண்டை சிவகுருநாதபுரம் கூட்டுறவு பண்டகசாலை லிட் க்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அண்ணாமலை, ஆறுமுகம், ஜெயபால், சங்கர் ஆகியோரும் திமுக சார்பில் கணேசன், சங்கரேஸ்வரன், மாரியப்பன், முத்து ஆகியோரும் வெற்றி பெற்றனர். ஏற்கனவே இந்திரா, சங்கரதேவி, சண்முகசெல்வி ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory