» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஐந்தருவியில் குளிக்க இரண்டாம் நாளாக தடை

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 10:55:58 AM (IST)




குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க இரண்டாம் நாளாக தடை விதிக்கப்பட்டது.

குற்றாலத்தில் கடந்த இரண்டு தினங்களாக பகல் வேளையில் சூரியன் தலைகாட்டவே இல்லை. வானம் எப்போது மேகமூட்டமாக காணப்பட்டது. பகல் முழுவதும் சாரல் தூறிக் கொண்டே இருந்தது.  இதன்  காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் மெயினருவி, ஐந்தருவி ஆகியவற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று காலையிலும் வெள்ளப்பெருக்கு குறையாத நிலையில், இரண்டாவது நாளாக நேற்றும் தடை நீடித்தது.  பழையகுற்றால அருவி, புலியருவி, சிற்றருவி ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் அங்கு குளித்து மகிழ்ந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory