» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பெண்போலீசின் கணவரை தாக்கிய இளைஞர் கைது

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 12:16:36 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் பெண் போலீசின் கணவரை தாக்கிய மற்றொரு பெண் போலீசின் கணவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் டூ ராஜபாளையம் செல்லும் சாலையிலுள்ள மலையபடிபட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயகொடி என்பவரது மகன் மாரிஸ்வரன் (25) இவர் கடந்த 11 மாதங்களுக்கு முன் பெண் போலீசை திருமணம் செய்துள்ளார். அதே ஊரை சேர்ந்த திருப்பதி (35). இவரும் அதே ஊரை சேர்ந்த பெண் போலீசை திருமணம் செய்துள்ளார்.  இதில் திருப்பதிக்கும் அவரது மனைவிக்கும் இடையே விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. ச

ம்பவத்தன்று நான் திருமணம் செய்ய நினைத்திருந்த பெண்ணை நீ எப்படி திருமணம் செய்யலாம் என கேட்டு திருப்பதி, மாரிஸ்வரனை தாக்கினாராம். இதில் மாரிஸ்வரன் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கரிவலம்வந்தநல்லுார் போலீசார் இது குறித்து வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory