» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

களக்காடு அருகே காட்டுப்பன்றிகள் அட்டகாசம் - 200 வாழைகள் நாசம்

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 1:56:58 PM (IST)

களக்காடு அருகே காட்டுப்பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகுந்து வாழைகளை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

களக்காடு அருகே உள்ள கக்கன்நகர் ஊருக்கு மேற்கு பகுதியில் ஏராளமான விளைநிலங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் வாழைகள் பயிர் செய்துள்ளனர். இப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக காட்டுப்பன்றிகள் நடமாட்டம் காணப்படுகிறது. இரவில் வனப்பகுதியில் இருந்து வெளிவரும் காட்டுப்பன்றிகள் கூட்டமாக விளைநிலங்களுக்குள் புகுந்து வாழைகளை சாய்த்து அவைகளை தின்று அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயி அருண் என்பவருக்கு 200 வாழைகள் நாசம் அடைந்துள்ளன. 

நாசமான வாழைகள் 3 மாதமான வாழைகள் ஆகும். ரசகதலி, ஏத்தன் கதலி வகைகளை சேர்ந்த வாழைகள் ஆகும். விவசாயிகள் இரவில் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் காட்டுப்பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகுந்து வாழைகளை சேதப்படுத்தி விடுகின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். காட்டுப்பன்றிகள் மற்றும் வன விலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுவதை தடுக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory