» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

செங்கோட்டை கேரள மலைப்பகுதியில் நிலச்சரிவு

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 2:08:44 PM (IST)

செங்கோட்டை அருகே கேரள மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளதால் வாகனங்களில் செல்வோர் அச்சம் அடைந்துள்ளனர்.

தென்மேற்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கேரளா, கர்நாடகாவில் கன மழை பெய்து வருகிறது. கேரளாவில் கன மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலர் பலியாகியுள்ளனர். 

இதில் செங்கோட்டை அருகே கேரள மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளதால் வாகனங்களில் செல்வோர் அச்சம்அடைந்துள்ளனர். ஆரியங்காவுக்கும், தென்மலைக்கும் இடையே மலைப்பாதையில் எடப்பாளையம் என்ற இடம் அருகே மண் சரிந்துள்ளது. 

ஏற்கனவே கேரளா மலைப்பாதையில் தென்மலை அருகே விரிசல் ஏற்பட்டதால் 10 டன்னுக்கு குறைவான எடையுடன் சரக்குகளை கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே கேரளாவுக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த சாலையை அதிகாரிகள் குழுவை வைத்து கண்காணித்து மண்சரிவு ஏற்படாமல் செய்யவும், சாலையை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory