» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 5:46:26 PM (IST)

தென் மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக திருநெல்வேலி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட மலைப்பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்ததில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் தலா 4 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மேலும், அதிகப்பட்சமாக 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory