» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சுரண்டை அருகில் விபத்து தடுப்பு அமைப்பு

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 6:14:35 PM (IST)
விபத்துகளை குறைக்கும் வகையில் சுரண்டை அருகில் விபத்து தடுப்பு அமைப்பு அமைக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகில் உள்ள கீழசுரண்டையில் பெட்ரோல் பங்க் முன்பு அடிக்கடி விபத்து நடக்கிறது .கடந்த ஐந்து ஆண்டுகளில் இருபதுக்கும் மேற்பட்ட விபத்து நடந்துள்ளது. இதில் நான்கு பேர் மரணமடைந்துள்ளனர் .கீழ சுரண்டையை சேர்ந்த ஆதரவு கரங்கள் இளைஞர்கள் இந்த பகுதியில் விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்க நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர் .தற்போது தனியார் உதவியுடன் சுரண்டை போலீசார் விபத்து தடுப்பு பலகை (பேரி கார்டு ) அமைத்தனர் .இந்த நிகழ்வில் சுரண்டை காவல் ஆய்வாளர் மாரீஸ்வரி ,ஆதரவு கரங்கள் நிர்வாகிகள் பழனி கண்னா ,கோபால் , மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் /.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory