» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மகனுடன் கடைக்கு சென்ற இளம்பெண் மாயம்

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 6:41:57 PM (IST)

கரிவலம்வந்தநல்லூர் அருகே மகனுடன் கடைக்கு சென்ற இளம்பெண் மாயமானார்.

நெல்லை மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் செக்கடி தெருவை சேர்ந்தவர் மணிகண்டகுமாரராஜா ( 42). இவரது மனைவி விநாயகலெட்சுமி (30). மணிகண்டகுமாரராஜா கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாம். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று மகனுடன் கடைக்கு சென்ற விநாயகலெட்சுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. 

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே தனது மனைவி காணாமல் போனது குறித்து மணிகண்டகுமாரராஜா கரிவலம்வந்தநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory