» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மனைவி வீட்டிற்கு வராததால் கணவர் தற்கொலை : பழவூர் போலீசார் விசாரணை

சனி 11, ஆகஸ்ட் 2018 12:32:54 PM (IST)

பணகுடி அருகே  பிரசவத்திற்கு சென்ற மனைவி திரும்ப வராததால் அவரது கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே கீழ்குளம் பகுதியை சேர்ந்த கணேசன் (32) கட்டிடதொழிலாளி. இவரது மனைவி பிரசவத்திற்காக தனது தாயார் வீடான புதியம்புத்துாருக்கு சென்றுள்ளார். பிரவசம் நடந்து முடிந்த பிறகு கணேசன் தனது மனைவி வீட்டிற்கு சென்று தன்னுடன் வருமாறு மனைவியை அழைத்துள்ளார் . ஆனால் தற்போது ஆடிமாதமாக இருப்பதால் அடுத்த மாதம் பிறந்த பிறகு வருவதாக தெரிவித்தார்களாம். 

இதனால் விரக்தியடைந்த கணேசன் தனது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடம் வந்த பழவூர் போலீசார் இறந்தவர் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory