» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் : மாவட்டஆட்சியர் அறிவிப்பு

சனி 11, ஆகஸ்ட் 2018 12:51:35 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட ஓய்வுற்றோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சென்னை ஓய்வூதிய இயக்குநரால் வருகிற 19.09.2018 புதன்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வைத்து நடைபெற உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு துறைகளில் (அரசின் நேரடி துறையில் பணிபுரிந்தவர்கள் மட்டும்) பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள், தங்களுக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைக்க பெறாமல் நிலுவையாக இருப்பின், தங்களுடைய குறைகளை தெரிவித்து முழு முகவரியுடன் விண்ணப்பங்களை இரட்டை பிரதிகளில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு பின்வரும் தகவல்களுடன் 31.08.2018 க்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இறுதியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலகம். கோரிக்கை தற்போது நிலுவையில் உள்ள அலுவலகம்ஃ அலுவலக மின் அஞ்சல் முகவரி. ஓய்வூதிய எண் குறிப்பிட்டுள்ள ஆணை நகல். 

இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, துறை அலுவலர்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 19.09.2018 அன்று நடைபெறும் ஓய்வுற்றோர் குறை தீர்க்கும் நாள் சுட்டத்தின போது சம்மந்தப்பட்ட அலுவலர்களால் மனுதாருக்கு தெரிவிக்கப்படும். எக்காரணம் கொண்டும் 31.08.2018 தேதிக்கு பின் வரப்பெறும் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் 19.09.2018 அன்று நடைபெறும் ஓய்வுற்றோர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திலும்தவறாது கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory