» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தடைசெய்த பிளாஸ்டிக் பை, புகையிலை பறிமுதல்

சனி 11, ஆகஸ்ட் 2018 1:43:23 PM (IST)
சுரண்டையில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யபட்ட பிளாஸ்டிக் பைகள்மற்றும் புகையிலைகளை டவுண் பஞ் அதிகாரிகள் கைப்பற்றி அபராதம் விதித்தனர்.

இது குறித்து நெல்லை மாவட்டம் சுரண்டை டவுண் பஞ் அதிகாரி காளியப்பன் கூறும்போது பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக தமிழகம் திகழவேண்டும் என அரசு அறிவித்துள்ளது. சென்னை பேரூராட்சிகள் இயக்குனர் ,நெல்லை மாவட்ட ஆட்சியர் ,நெல்லை மண்டல டவுண் பஞ்., உதவி இயக்குனர் அறிவுரையின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது . பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் தீங்கு குறித்து ஏற்கனவே டவுண் பஞ்., மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்ததப்பட்டது .இந்த நிலையில் சுரண்டையில் உள்ள கடைகள் ,வணிக வளாகங்கள் ,டீ கடைகளில் டவுண் பஞ் அதிகாரிகள் மற்றும் சுகாதார அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தடை செய்யபட்ட பிளாஸ்டிக் பைகள் 27 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது . அதிர்ச்சி அளிக்கும்விதமாக 4500 கிலோ புகையிலை கைப்பற்றப்பட்டது .பிளாஸ்டிக் மற்றும் புகையிலை விற்பனை செய்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது .சோதனையின் போது உணவு பாதுகாப்பு அதிகாரி சங்கரலிங்கம் ,வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா,சுகாதார ஆய்வாளர்கள் கணேசன்,சண்முகசுந்தரம் மற்றும் டவுண் பஞ் பணியாளர்கள் குழுக்களாக சென்று சோதனையில் ஈடுபட்டனர் இந்த சோதனை தொடரும்,பிளாஸ்டிக் இல்லா டவுண் சுரண்டை திகழும் என நிர்வாக அதிகாரி காளியப்பன் கூறினார் . 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory