» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பள்ளி மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி : பாளையங்கோட்டையில் பரபரப்பு

திங்கள் 13, ஆகஸ்ட் 2018 6:37:33 PM (IST)

பாளையங்கோட்டையில் பெண்கள் பள்ளியில் மாடியிலிருந்து குதித்து பள்ளி மாணவி தற்கொலைக்கு முயன்றது பரபரப்பினை ஏற்படுத்தியது.

வல்லநாடு பகுதியை சேர்ந்த காசிராஜன் என்பவரது மகள் தம்பிராட்டி (18). அவர் பாளையங்கோட்டையிலுள்ள சாராள்தக்கர் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். அங்கு பாெருளாதார ஆசிரியராக உள்ள பியூலா என்பவர் மாணவியை வகுப்பறையில் பலபேர் முன்னிலையில் கண்டித்தாராம். இதனால் மனமுடைந்த தம்பிராட்டி மதிய உணவு இடைவேளையின் போது பள்ளியின் 2 வது மாடி கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.இதில் இரு கால்களும் உடைந்தது. 

பள்ளி நிர்வாகம் மாணவியை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்த தகவலறிந்ததும் ஆவேசமடைந்த மாணவியின் பெற்றோர் பள்ளியினை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அந்த பெண்ணை மேல்சிகிச்சைக்காக பாளை., அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து மாவட்டகல்விஅதிகாரி பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினார். 

மாணவியின் தாயார் பாலம்மாள் இது பற்றி கூறும் போது எனது மகளை ஆசிரியை பியூலா அடிக்கடி திட்டி வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த என் மகள் இந்த விபரித முடிவை எடுத்துள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகமோ மாடியில் விளையாடி கொண்டிருக்கையில் தவறி விழுந்து மாணவி காயமடைந்ததாக திசை திருப்புகின்றனர். என குற்றம் சாட்டினார்.


மக்கள் கருத்து

உண்மைAug 14, 2018 - 09:49:57 AM | Posted IP 162.1*****

படிக்கலன்னி திட்டிரக்கூடாதுப்பா...ரோசம் வந்துரும்..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் மாயம்

வெள்ளி 20, செப்டம்பர் 2019 8:19:29 PM (IST)

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory