» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அரசுப்பேருந்து மோதி விபத்து தந்தை,மகள் சாவு : பாளையங்கோட்டையில் பரிதாப சம்பவ‌ம்

வியாழன் 23, ஆகஸ்ட் 2018 10:31:34 AM (IST)

பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே பேருந்து மோதி தந்தையும் முதலாம் வகுப்பு படிக்கும் அவரது மகளும் பலியானார்கள்.

பாளையங்கோட்டை பேருந்து நிலைய பகுதியிலுள்ள சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் இன்று காலை பாளையங்கோட்டை ஆதித்தனார் தெருவை சேர்ந்த சத்திய நாராயணன் (34) என்பவர் தனது மகள் சாகாவை (6) பள்ளியில் விட மோட்டார் பைக்கில் அழைத்து வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த துாத்துக்குடி செல்லும் அரசுப் பேருந்தில் பைக் மோதி தந்தையும் மகளும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 

விபத்தில் பலியான சத்திய நாராயணன் எலக்ட்ரிசியனாக உள்ளார். சாகா அப்பகுதியில் உள்ள சாராள் தக்கர் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். விபத்து குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவர்கள் உடலை பாளை. ஹகிரவுண்ட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்து நெல்லை சந்திப்பு போக்குவரத்து குற்றப்புலனாய்வு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காலையில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 அதிவேகத்தில் செல்லும் பேருந்துகள் : நடவடிக்கை எடுக்கப்படுமா ?

நெல்லையில் சமீப காலமாகவே பேருந்துகளின் அதிவேகம் பலரையும் விபத்துக்குள்ளாக்கி வருகிறது. முன்பெல்லாம் ஊருக்கு வெளியே அதிக வேகத்தில் சென்று போட்டி போட்டு பயணிகளை ஏற்றி வந்த பேருந்துகள் தற்போது நகருக்குள்ளேயே அதிக வேகத்தில் செல்கிறது. அது மட்டுமின்றி பிற நான்கு சக்கரவாகனங்களும் அதிக வேகத்தில் செல்வதை காண முடிகிறது. நகரில் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு அடிக்கடி ஹெல்மட் சோதனை செய்யும் போலீசார், இது போன்று அதிக வேகத்தில் சென்று உயிரிழப்புகள், படுகாயங்களை ஏற்படுத்தும் பேருந்துகள், மினி பேருந்துகள், கார்கள் ஆகியவற்றின் மீதும் அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 


மக்கள் கருத்து

செ.ராஜ்குமார்Aug 23, 2018 - 03:38:08 PM | Posted IP 106.2*****

சம்பவ இடத்தில் வேகத்தடையோமற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory