» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

முறப்பநாட்டில் ஒற்றுமையுடன் தாமிரபரணி புஷ்கர விழா நடத்த சமாதானகூட்டத்தில் முடிவு

புதன் 12, செப்டம்பர் 2018 8:58:58 PM (IST)

துாத்துக்குடி மாவட்டம் முறப்பாட்டில் தாமிரபரணி புஷ்கர விழாவை ஒற்றுமையாக நடத்த வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதானக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

முறப்பநாடு கோவில்பத்து கிராமத்தில் ஸ்ரீதாமிரபரணி புஷ்கர விழா கமிட்டியினர் மகாபுஷ்கர விழா நடத்துவது தொடர்பாக விழாகமிட்டிக்கும், ஊர் பொதுமக்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் துாத்துக்குடி சார் ஆட்சியர் உத்தரவின்படி இன்று ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சந்திரன் தலைமையில் இரு தரப்பினர் இடையிலான சமாதான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இருபிரிவினரும் கலந்து கொண்டு ஊர் பொதுமக்கள் கோரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி விழாவில் கடினமான பொருளால் செய்யபட்ட லிங்கம் அமைத்து வழிபட கூடாது. ஸ்தாபிக்கப்பட்ட லிங்கம் விழா முடிந்த பிறகு ஸ்ரீ நங்கமுத்தம்மன் காேவில் அருகில் தாமிரபரணி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட வேண்டும்.

விழாவில் தாமிரபரணி டிரஸ்டி முத்துக்குமாருக்கு சொந்தமான இடத்தில் யாகங்கள் செய்ய பொதுமக்களுக்கு ஆட்சேபணையில்லை. முத்துக்குமார் அனுபவித்து வரும் ஸ்ரீ நங்கமுத்தம்மன் காேவில்க்கு பாத்தியப்பட்ட நஞ்சை நிலத்தில் விவசாயம் பாதிக்கப்படும் விதத்தில் எவ்வித கட்டுமானம் மற்றும் மணல்பரப்புகளோ இருப்பின், அது விழா முடிந்த மூன்று நாட்களில் அகற்றப்பட வேண்டும். விழாவிற்கு வரும் பக்தர்களால் ஊர்மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகளை விழா கமிட்டியார் செய்வது அவர்களின் கடமை ஆகும். கைலாசநாதர் கோவிலில் புஷ்கரவிழா நாட்களில் ஊர்மக்கள் பூஜை யாகங்கள் செய்ய விழாகமிட்டியார் எவ்வித இடையூறும் செய்யகூடாது. விழாவிற்கு பெருமளவு பக்தர்கள் வந்து தங்கி வேள்விகளில் கலந்து கொள்ளவிருப்பதால் பக்தர்களுக்கு தேவையான அனைத்து சுகாதார , உணவு,குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் விழாகமிட்டியினர் செய்து தர வேண்டும்.  

பொதுப்பணித்துறையால் அனுமதிக்கப்பட்ட அளவின்படி படித்துறை அமைக்க வேண்டும். இந்த தீர்மானங்களை இருதரப்பும் ஏற்று காெண்டு ஒற்றுமையாக புஷ்கரவிழா நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டது. சமாதான கூட்டத்தில் முத்துக்குமார். சங்கரசுப்பிரமணியன், ஊர்தலைவர் ராஜபாண்டி, பாலமுருகன், காந்திமதிநாதன், காஞ்சனாதேவி, செந்துார்பாண்டியன் மற்றும் காவல்துறை, வருவாய்துறையினர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

முறப்பநாடு பொது மக்கள்Sep 13, 2018 - 12:19:06 PM | Posted IP 162.1*****

அருள்மிகு கைலாசநாதர் கோவில் நேரில் அமைத்துள்ள தாமிரபரணி இடத்தில் நடத்தல் மிகவும் நன்றாக இருக்கும் .....

முறப்பநாடு பொது மக்கள்Sep 13, 2018 - 12:16:22 PM | Posted IP 141.1*****

கோவில் இடத்தில் அமைத்துள்ள தாமிரபரணி நதிதில் நடத்தினால் சிறப்பாக இருக்கும் ........

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory