» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை : அம்பாசமுத்திரம் அருகே சாேக சம்பவம்

வியாழன் 13, செப்டம்பர் 2018 11:32:46 AM (IST)

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே, மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலை சேர்ந்தவர் மகேந்திரன் (35) . இவர் திருப்பூரில் பனியன் கம்பெனியில் டிசைனராக பணிபுரிந்து வந்துள்ளார். அண்மையில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அவர், 10 நாட்களுக்கு முன்னர் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிவந்திபுரத்தில் தனது மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார்.திருப்பூரில் இருந்தபோதே மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை எடுத்து, அதில் சரியாகததால் பாபநாசத்தில் பச்சிலை வைத்தியம் பார்ப்பதற்காக மகேந்திரன் குடும்பத்துடன் வந்ததாக கூறப்பட்டள்ளது. 

மேலும் நோய் முற்றி தான் இறந்து விட்டால் தனது மனைவி மற்றும் குழந்தைகளை யார் காப்பாற்றுவார்கள் என்ற பயத்தில் மகேந்திரன் இருந்ததாகவும் இதனால் அவர் நேற்று இரவு பாலில் விசத்தை கலந்து மனைவி ரேவதிக்கும் குழந்தைகள் கதிர்வேல், அஸ்மிதாவுக்கும் கொடுத்து கொலை செய்து விட்டு தானும் விஷத்தை குடித்து விட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.தகவலின் பேரில் விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் சிவந்திபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory