» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பொருளுக்கு பணம் கேட்டவருக்கு கொலைமிரட்டல் : மர்மநபர்களுக்கு வலை

வியாழன் 13, செப்டம்பர் 2018 7:07:32 PM (IST)

ரெட்டியார்பட்டியில் பொருட்கள் வாங்கியதற்கு பணம் கேட்டதாக ஹார்டுவேர் கடை உரிமையாளருக்கு கொலைமிரட்டல் விடுத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பாளை ரெட்டியார்பட்டி கார்த்திகேயன்நகரில் ஹார்டுவேர் கடைநடத்தி வருபவர் ஆனந்தராஜ்(31). அதே பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் கடையில் கட்டுமானசாமான்கள் வாங்கிய வகையில் பணம் கொடுக்க வேண்டுமாம். அந்த பணத்தை ஆனந்தராஜ் கேட்டுள்ளார். இதனால் ஆத்திர மடைந்த முத்துசாமி தனது நண்பர் இருவருடன் சேர்ந்து பணத்தை எப்படி கேட்கலாம் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்ததுடன் கடையில் இருந்த பொருள்கள் மற்றும் அங்கு நிறுத்தியிருந்த தொட்டி ஆட்டோவையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி கும்பலை தேடி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory