» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பேட்டையில் மூதாட்டியிடம் தங்கநகை பறிப்பு

வெள்ளி 14, செப்டம்பர் 2018 10:33:46 AM (IST)

திருநெல்வேலி பேட்டையில் பால் வாங்க சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் தங்க சங்கிலியைப் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

பேட்டை வி.வி.கே. தெருவைச் சேர்ந்தவர் இசக்கி. இவருடைய மனைவி தங்கம் (75). இவர், வியாழக்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள பால் பண்ணையில் பால் வாங்கிக்கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்பைக்கில் வந்த இரண்டு பேர் , மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பியோடினர். இதுகுறித்து புகாரின் பேரில் பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory