» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

விநாயகர்சிலை ஊர்வலத்தில், இருதரப்பினர் மோதல் : செங்கோட்டையில் பரபரப்பு

வெள்ளி 14, செப்டம்பர் 2018 11:02:30 AM (IST)

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, இருதரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலில், மோட்டார்பைக்குகளும், நான்கு சக்கர வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, செங்கோட்டையில் நேற்று இரவு விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. மேலூர் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றபோது, ஒரு தரப்பினர் தங்கள் பகுதிக்குள் சிலையை எடுத்து வரக்கூடாது எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, ஊர்வலத்தை நடத்தினர்.

ஊர்வலம் அப்பகுதியை கடந்த சிறிதுநேரத்தில், இருதரப்பு இளைஞர்களும் கற்களை வீசி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், இன்ஸ்பெக்டர் ஒருவர் உள்பட 10க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.மேலும், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும், கார் மற்றும் இதர 4 நான்கு சக்கர வாகனங்களின் கண்ணாடிகளும் சேதமடைந்தன. 

நிலைமை மோசமாவதை தடுக்க, லேசாக தடியடி நடத்தி, அவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.பின்னர் மோதல் நடந்த பகுதியை பார்வையிட்ட நெல்லை எஸ்.பி. அருண் சக்திகுமார், அமைதியான முறையில் சிலையை கரைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory