» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நான்கு வழிச்சாலையில் அரசு பஸ் - லாரிகள் மோதல் 5 -பேர் காயம்

வெள்ளி 14, செப்டம்பர் 2018 11:15:49 AM (IST)
வள்ளியூர் 4 வழிச்சாலையில் அரசு பஸ்சும் லாரிகளும் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை கேசவனேரி, ராஜபுதூர் வழியாக திருக்குறுங்குடிக்கு அரசு பஸ் புறப்பட்டது. டிரைவர் கல்யாணசுந்தரம் பஸ்சை ஒட்டினாராம்.  4 வழிச்சாலை கேசவனேரி பிரிவில் பஸ் சென்ற போது நாகர்கோவிலில் இருந்து வந்த லாரி மீது மோதியது. 

அதன் பின் வந்த மற்றொரு லாரியும் மோதியது. இந்த விபத்தில் 5 பயணிகள் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வள்ளியூர் எஸ்.ஐ.சரவணக்குமார் தலைமையிலான போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory