» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தாமிரபரணி புஷ்கர விழா கொண்டாடிய ஜான்பாண்டியன்

வெள்ளி 14, செப்டம்பர் 2018 12:34:36 PM (IST)

திருநெல்வேலியில் தாமிரபரணி நதிக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் நிறுவனர் ஜான் பாண்டியன் இன்று தாமிரபரணி புஷ்கர விழா கொண்டாடினார்.

நெல்லை தாமிரபரணி நதிக்கு 144 ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் மகாபுஷ்கர விழா வருகிற அக்டோபர் மாதம் 11-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தாமிரபரணியில் அக்டோபர் மாதம்  நடைபெற இந்த விழா 12 நாட்கள் கோலாகலமாக நடைபெறுகிறது  இதற்கான ஏற்பாட்டை தமிழக அரசும், துறவிகள் கூட்டமைப்பும் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் நிறுவனர் ஜான் பாண்டியன் இன்று தாமிரபரணி புஷ்கர விழா கொண்டாடினார். தனது ஆதரவாளர்களுடன் தாமிரபரணி நதிக்கரைக்கு வந்த அவர் அங்கு தாமிரபரணிக்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory