» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மோட்டார்வைத்து குடிநீர் உறிஞ்சினால் நடவடிக்கை : வாசுதேவநல்லுார் செயல்அலுவலர் எச்சரிக்கை

வெள்ளி 14, செப்டம்பர் 2018 5:44:09 PM (IST)

வாசுதேவநல்லுார் பகுதிகளில் மோட்டார்வைத்து குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து வாசுதேவநல்லுார் பகுதி செயல்அலுவலர் லெனின் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, வாசுதேவநல்லுார் பகுதிகளில் சிலர் மோட்டார்வைத்து குடிநீர் உறிஞ்சுவதால் அனைவருக்கும் குடிநீர் விநியோகம் செய்ய இயலாத நிலை உள்ளது. வீடுகளின் கீழ் தொட்டி வைத்து தண்ணீரை சேகரிப்பதால் நோய்களை உருவாக்கும் கொசுக்கள் அங்கு உருவாகிறது. இச்செயல் சட்டவிரோதமானது. அது குறித்த விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. உறுதி செய்யப்பட்டால் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory