» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் : கர்ப்பிணிகளுக்கு, அமைச்சர் அறிவுரை

வெள்ளி 14, செப்டம்பர் 2018 6:00:27 PM (IST)

கர்ப்பிணி தாய்மார்கள் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என திருநெல்வேலியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுட்சுமிவேண்டுகோள் விடுத்தார்.

திருநெல்வேலி வானவில் திருமண மண்டபத்தில் தமிழக அரசின் சமூகநலம் மற்றம் சத்துணவுத் திட்டத் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் நடத்தப்பட்ட 200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழாவில்ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி பங்கேற்று, சேலை, வளையல் உள்ளிட்ட சீதனப் பொருட்களை இன்று (14.09.2018) வழங்கினார். இவ்விழாவின் போது அமைச்சர் தெரிவித்ததாவது-தமிழக அரசு கர்ப்பிணி பெண்களுக்கு அவர்களின் கர்ப்ப காலத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும். எந்தந்த மாதத்தில் எந்த தடுப்பூசி போட வேண்டும். 

எந்தெந்த உணவுகள் சாப்பிட வேண்டும் மற்றும் பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக பிறப்பதற்கு கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் ஆகியவற்றை தெரிந்து கொள்வதற்காகவும், குழந்தைகள் பிறந்த பின்பு தாய்ப்பாலின் மகத்துவம் குழந்தைகளுக்கு உணவூட்டும் முறை, தடுப்பூசி போடும் முறை மற்றும் குழந்தைகள் பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், ஏழை கர்ப்பிணி பெண்கள் நமக்கும் சீமந்த விழா நடத்திட குடும்பத்தில் நிதி இல்லையே என்ற எண்ணம் அவர்கள் மனதில் தோற்றுவிடாமல் இருக்கவும், அரசு இந்த சமுதாய வளைகாப்பினை நடத்தி, பல்வேறு சீதனங்களை கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கி வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 18,150 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது. இன்று 3630 கர்ப்பிணி பெண்களுக்கு 66 இடங்களில் நடத்தப்படுகிறது. இவ்விழாவில் கலந்து கொள்ளும் கர்ப்பிணிகளுக்கு கர்ப்பகால பராமரிப்பு பற்றிய கையேடு வழங்கப்படுகிறது. இதில் உள்ள விவரங்களை அறிந்து சத்தான உணவுகளை கர்ப்பிணி பெண்கள் உட்கொண்டு, ஆரோக்கியமான குழந்தைகளை பெற வேண்டும். மேலும், திருநெல்வேலி மாவட்டத்தில் 0 வயது முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வயதுக்கேற்ற உயரம் மற்றும் எடை இல்லாத, வயதுக்கேற்ற உயரம் மற்றும் எடையினை கண்காணிக்க செப்டம்பர் மாதம் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து விழிப்பணர்வு அந்தந்த அங்கன்வாடி மையங்களில் நடைபெறுகிறது. 

எனவே, பொதுமக்கள் அருகாமையில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு சென்று தங்களது 0 வயது முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை உயரம் உள்ளதா என சோதித்து பயனடைய வேண்டுமென தெரிவித்தார். இவ்விழாவில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, கோட்டாட்சியர் மைதிலி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் ஜெயசூர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory