» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி பகுதியில் விநாயகர்சதுர்த்தி கொண்டாட்டம்

வெள்ளி 14, செப்டம்பர் 2018 6:47:11 PM (IST)

தென்காசி பகுதியில் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

தென்காசி காசிவிசுவநாதர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அவல், பொரி, கடலை, கொழுக்கட்டை, சுண்டல், சித்ரா அன்னங்கள், சர்க்கரைப் பொங்கல் உள்ளிட்டவை விநாயகருக்கு நெய்நேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். தென்காசி தெற்கு மாசிவீதி கற்பகவிநாயகர் கோவிலில் கணபதி ஹோமத்துடன் சதுர்த்தி வழிபாடு துவங்கியது. 

தொடர்ந்து சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தென்காசி நம்பிராஜன் சாலை ஸ்ரீதர்மவிநாயகர், ஒப்பனை விநாயகர் கோவில், மேலச்சங்கரன்கோவில், கீழச்சங்கரன்கோவில், பூக்கடை விநாயகர் கோவில், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு விநாயகர் கோவில் ஆகியவற்றிலும் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. மேலும் காசிவிசுவநாதர் கோவில்முன்பு, கூலக்கடை பஜார் சந்தி விநாயகர் கோவில் முன்பு மற்றும் வாய்க்கால் பாலம் உள்ளிட்ட இடங்களில் 4 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

குத்துக்கல்வலசை ஸ்ரீபசிதுஷ்டராய கண்ட விநாயகர் கோவில் சதுர்த்தி வழிபாட்டினை முன்னிட்டு விநாயகருக்கு மாபொடி, மஞ்சள் பொடி, திரவியம், பால், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், தயில், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் மகாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் கணேசன் சுப்பையா தலைமையில் விநாயகர் பக்தர்கள் செய்திருந்தனர்.

குற்றாலம் திருக்குற்றாலநாதர் கோவில் , இலஞ்சி குமாரர் கோவில், பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோவில், மேலகரம் செண்பக விநாயகர்கோவில், ஆய்க்குடி பாலசுப்பிரமணியசுவாமி கோவில், ஆயிரப்பேரி சாலை ஸ்ரீராஜகுல தெட்சணாமூர்த்தி கோவிலில் உள்ள செண்பகவிநாயகர் கோவில், ஆயிரப்பேரி செல்வவிநாயகர் கோவில், கீழப்புலியூர் புலிக்குட்டி விநாயகர்கோவில், மேலப்புலியூர் விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மேலகரம் செண்பகவிநாயகர் கோவிலில் இரவு விநாயகர் வீதிஉலா நடைபெற்றது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory