» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தொடர் செயின்பறிப்பில் ஈடுபட்ட நான்கு பேர் கைது : திருநெல்வேலி போலீசார் நடவடிக்கை

செவ்வாய் 18, செப்டம்பர் 2018 8:06:12 PM (IST)

திருநெல்வேலி மாநகரில் தொடர் செயின்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருநெல்வேலி மாநகரில் சமீப காலமாக அதிகளவில் தொடர் செயின்பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்ய திருநெல்வேலி மாநகர காவல்ஆணையாளர் கபில் உத்தரவிட்டதன் பேரில் திருநெல்வேலி சந்திப்பு குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயசீலன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் இன்று காலை பெருமாள்புரம் திருமால்நகரை சேர்ந்த சேக் என்பவரது மகன் அப்துல்ரப்பானி (23), பாளையங்கோட்டை 7வது குறுக்குதெருவை சேர்ந்த சாகுல்ஹமிது என்பவரது மகன் செய்யது (31), மீனாட்சிபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பாஸ்கர் (34), மானுார் பள்ளமடையை சேர்ந்த ஆதிமூலம் (42) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தியதில் இவர்கள் பேட்டை, பாளையங்கோட்டை, விவிகே தெரு ஆகிய பகுதிகளில் நடைபெற்ற 7 செயின்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர்களிடமிருந்து சுமார் 6 லட்சம் மதிப்புள்ள 26 பவுன் நகைகள், மற்றும் மூன்று மோட்டார்பைக்குகள், ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. ஐந்து தினங்களுக்குள் குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை திருநெல்வேலி மாநகர காவல்ஆணையாளர் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory