» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கூட்டுறவு சங்க தலைவர் தேர்தலில் திமுக வெற்றி

புதன் 19, செப்டம்பர் 2018 10:29:02 AM (IST)

திருநெல்வேலி மாவட்டம் வீகேபுதூர் கூட்டுறவு சங்க தலைவர் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

வீரகேரளம்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாகஸ்தர்களுக்கான தேர்தலில் திமுகவை சேர்ந்த செல்லக்காளி, ஞானச்சாமி, கருணாகரன், கருணாநிதி, முருகன், யாக்கோபு பொன்னுத்துரை, மாரியம்மாள், பூசைக்கனி, தேனம்மாள், ஆகியோரும், அதிமுக சார்பில் முருகன், இசக்கியம்மாள் ஆகியோரும் வெற்றி பெற்றனர். இதனை தொடர்ந்து நேற்று தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் நடந்தது. 

தேர்தல் அதிகாரி சிவசுப்பிரமணியன் தேர்தலை நடத்தினார். இதில் திமுகவை சேர்ந்த முருகன் தலைவராகவும், கருணாநிதி துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து நிர்வாக குழு கூட்டம் நடந்தது. தேர்வு செய்யப்பட்ட தலைவர், துணைத் தலைவர் மற்றும் நிர்வாகஸ்தர்களை கட்சி பிரமுகர்களும், பெரியோர்களும், பொதுமக்களும், ஊழியர்களும் வாழ்த்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory