» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வேனை வழிமறித்து மூன்றரைலட்சம் பணம் கொள்ளை : பாளையங்கோட்டையில் பரபரப்பு

புதன் 19, செப்டம்பர் 2018 11:22:57 AM (IST)

பாளையங்கோட்டையில் நள்ளிரவு மினிவேனை வழிமறித்து வசூல்பணம் சுமார் 3 லட்சத்து 63 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிரபுரம் மாவட்டம் சின்னகாஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பிஸ்கட் கம்பெனியில் ராமசந்திரன் (30) என்பவர் ஓட்டுனராகவும் அதே நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் பணியில் பாபு (22) என்பவரும் வேலை செய்து வருகின்றனர். நேற்று தங்கள் நிறுவனத்தின் வியாபாரம் தொடர்பாக பணம் வசூல் செய்ய துாத்துக்குடி வந்துள்ளனர். அங்கு சுமார் ஒன்றேகால் லட்சம், நாகர்கோவிலில் சுமார் ஒன்றேகால் லட்சம், திருநெல்வேலியில் சுமார் ஒன்றேகால் லட்சம் பணம் வசூல் செய்து விட்டு நள்ளிரவு பாளையங்கோட்டை நான்குவழிச்சாலையில் மினிவேனில் சென்றுள்ளனர். 

அப்போது 3 மோட்டார்பைக்குகளில் வந்த 6 பேர் வேனை திடீரென வழி மறித்து நிறுத்தி ராமச்சந்திரன் மற்றும் பாபு ஆகியோரை தாக்கியுள்ளனர்.  மேலும் பெட்ரோல் செலவு போக கையில் வைத்திருந்த வசூல் பணம் சுமார் 3 லட்சத்து 63 ஆயிரத்தை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் மாயமானார்கள். இது குறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு உதவி கமிஷனர் எஸ்கால், சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். நள்ளிரவு பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory