» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காமராஜர் கல்லூரியில் பிளாஸ்டிக்ஒழிப்பு கருத்தரங்கம்

புதன் 19, செப்டம்பர் 2018 11:37:15 AM (IST)
திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியின் என்எஸ்எஸ் அணி எண் 201ன் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரிக்கான கனிவேலன் கலையரங்கத்தில் நடந்தது. 

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் செந்தமிழ்செல்வி தலைமை வகித்தார். என்எஸ்எஸ் திட்டஅலுவலர் மெர்லின் சீலர் சிங் வரவேற்றார். செங்கோட்டை உதவி வேளான் அலுவலர் ஷேக் முகைதீன் பிளாஸ்டிக்கினால் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்படும் தீமைகள் விவசாயத்திற்க்கு பிளாஸ்டிக் பொருட்களால் ஆபத்துகள். 

பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டியதின் அவசியம் குறித்தும் மாணவர்களின் பங்கு குறித்தும் பேசினார். வணிகவியல் தலைவர் பீர்கான் வாழ்த்தி பேசினார். உடற்கல்வி ஆசிரியர் மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவ, மாணவியர் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் தொழில் நிர்வாகத்துறை தலைவர் நாராயணன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory