» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சங்கரன்கோவிலில் வீடு புகுந்து பொருட்கள் கொள்ளை

புதன் 19, செப்டம்பர் 2018 2:25:16 PM (IST)

சங்கரன்கோவிலில் தொழிலாளி வீடு புகுந்து சுமார் 4½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லைமாவட்டம் சங்கரன்கோவில் புதுமனை 4-ம் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் ( 50). இவர் தென்காசியில் உள்ள தனியார் சுவீட்ஸ் கடையில் வேலை செய்து வருகிறார். இதனால் தென்காசி மேலகரத்தில் குடும்பத்துடன் தங்கி உள்ளார். வாரம் ஒரு முறை மட்டும் சங்கரன்கோவிலுக்கு வந்து செல்வாராம்.மர்ம நபர் சம்பவத்தன்று இரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். பின்னர் பீரோவையும் உடைத்து உள்ளே இருந்த சுமார் ரூ.95 ஆயிரம் மதிப்புள்ள 4½கிலோ வெள்ளி பொருள்களை கொள்ளை அடித்து விட்டு சென்று விட்டான். வேறு எதுவும் விலை உயர்ந்த பொருள்கள் இல்லாததால் அவை தப்பின. காலையில் வீட்டிற்கு வந்த மாரியப்பனின் தாயார் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இது பற்றி சங்கரன்கோவில் டவுண் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory