» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் டாஸ்மாக் பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

புதன் 19, செப்டம்பர் 2018 5:24:26 PM (IST)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலியில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக்  பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கடைகள் மூடப்பட்ட பணியாளர்களுக்கு விதிகளின்படி பணி வழங்க வேண்டும்,சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளிலும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்த கூடாது, சட்டவிரோத முறையற்ற மதுபான கூடங்களை ஊக்குவித்து அதன் மூலம் கையூட்டு பெற்று நிர்வாகத்திற்கும் அரசிற்கும் வருவாய் இழப்பு ஏற்படுத்த கூடாது, டாஸ்மாக் பணியாளர்களிடம் மாதா மாதம் கப்பம் வசூல் செய்ய கூடாது, தலைமை அலுவலக சுற்றறிக்கையின் விதிகளை மீறி முறையற்ற பணியிட மாறுதல்கள் கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாளை நூற்றாண்டு மண்டபம் முன்பு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில பொது செயலர் பழனிபாரதி,மாநில துணை தலைவர் ராஜா, மாநில துணை செயலாளர் மரகதலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் கோரிக்கைகளை விளக்கி பேசினார் . ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் சிவகுமார், மாநில பொது செயலாளர் கோபிநாத் ,முன்னாள் மாநில பொது செயலாளர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory