» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பழைய செய்தித்தாள் செய்தியை கொண்டு தலைமறைவானவரை பிடித்த காவல்துறை

புதன் 10, அக்டோபர் 2018 12:24:29 PM (IST)


சுரண்டை அருகே ஆடு திருடியவரை பழைய செய்தித்தாள் செய்தியை வைத்து போலீசார் பிடித்துள்ளனர். மேலும் அவரை பற்றிய தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை அருகில் உள்ள முத்துகிருஷ்ணபேரியை சேர்ந்தவர் வைத்தியலிங்கம் மகன் ராமர் இவருக்கு சொந்தமான இரண்டு ஆடுகள் கடந்த 2008 ஆம் ஆண்டு திருடு போய்விட்டன. இது குறித்து அவர் வீகேபுதூர் போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் சந்தேகத்திடமான இரண்டு பேரை பிடித்து விசாரித்த போது இதில் உக்கிரன்கோட்டையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பாண்டியன்(48/18) மகன் மிலன் சிங்  என்பவர் சம்பந்தப்பட்டிருப்பதும் அவர் மீது பல போலீஸ் ஸ்டேசன்களில் பல வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது ஆனால் மிலன்சிங்கை பற்றி எந்த துப்பும் துலங்கவில்லை இந் நிலையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் நடக்கும் திருட்டுகளை தடுக்க உயரதிகாரிகள் உத்தரவிட்டதை தொடர்ந்து பழைய பைல்களை தூசி தட்டிய வீகேபுதூர் எஸ்ஐ சத்தியவேந்தன் கண்ணில் கடந்த 06-10-2016 அன்றைய .நாளிதழ்களில் மிலன்சிங் ஒரு கொலை மற்றும் பெண்களை பாலியல்துன்புறுத்தலுக்கு ஆளாகி கைதான செய்தி பட்டது இதை பிடித்து முன்னேறிய  எஸ்ஐ சத்தியவேந்தன் அந்த இளம் பெண்ணை கொன்று எரித்த வழக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடப்பதை மோப்பம் பிடித்து தனிப்படை அமைக்கப்பட்டது.

இதன் பேரில் வழக்கு நடக்கும் விபரங்களை சேகரித்த போலீசார் மாறு வேடத்தில் கோர்ட்டில் கண்காணித்தப்படி இருந்தனர் அப்போது மிலன்சிங் வழக்குகளில் ஆஜராகாமல் இருப்பதும் அவரது 4 வது மனைவி ஜீவிதா என்பவர் மட்டுமே ஆஜராகி செல்வதும் தெரியவந்தது அவரை மாறு வேடத்திலேயே பின்  தொடர்ந்த போலீசார் வீட்டை கண்டுபிடித்தனர். ஆனால் போலீசார் வருவதை தெரிந்து கொண்ட மிலன் சிங் அங்கிருந்து தலைமறைவாகி தென்காசி நன்னகரம் பகுதிக்கு வந்துள்ளார். அதனை தெடர்ந்து போலீசார் அவரை வீகே புதூர் கொண்டு வந்து விசாரித்த போது அவருக்கு டைசி, சலோமி (எ) பாக்கியலட்சுமி, இவரது தங்கை ஜெனிபர் ராணி, கோயம்புத்தூரை சேர்ந்த ஜீவிதா ஆகியோரை திருமணம் செய்து தற்போது ஜீவிதாவுடன் வாழ்ந்து வருவதும், திருநெல்வேலியை சேர்ந்த அன்பு ஸ்டெல்லா என்பவரிடம் வேலை வாங்கி  தருகிறேன் என கூறி இரண்டே முக்கால் லட்ச ரூபாய் ஏமாற்றி அவருடன் இருந்து அவரை மிலன்சிங்கும், ஜீவிதாவும் கொன்று எரித்ததாகவும் அவ் வழக்கிற்கான தான் ஜீவிதா கிருஷ்ணகிரியில் ஆஜரானதும். காந்திமதி என்ற மாற்றுதிறனாளி பெண்ணிடம் நாலரை லட்சம் பணம், 15 பவுன் நகை 3 சென்ட் இடத்தை அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அடித்து விரட்டியதும், இதே போன்று பல பெண்களையும் ஆண்களையும் ஏமாற்றியிருப்பதும் பல சிறிய திருட்டுகளில் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இது தொடர்பாக வீகேபுதூர், குற்றாலம், சங்கரன்கோவில், செங்கோட்டை, பாப்பாகுடி போன்ற பல போலீஸ் ஸ்டேசன்களில் பல வழக்குகள் பதிவாகியிருப்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து தொடர்ந்து விசாரித்த போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மிலன்சிங் இடத்தையும் தொலைபேசி எண்ணையும் அடிக்கடி மாற்றியுள்ளார். க்கிரன்கோட்டை, மங்களாபுரம் பகுதியில் இருந்த இவர் பின்னர் ராணிப்பேட்டை, ஓண்டிப்புதூர், மணலி, குருவிகுளம், ஆலங்குளம், மலையடிப்பட்டி, ரெட்டிசேரி, தருவை, அகஸ்தியர்பட்டி, தர்மபுரி டவுன், சாயல்குடி, பெரியநாயக்கன்பாளையம், ஓட்டன்சத்திரம் என அடிக்கடி இடத்தை மாற்றியுள்ளார், அதே போல் செல்போன் எண்ணையும் மாற்றியுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory