» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தி.மு.க.வில் இருந்து ஹிந்துக்கள் வெளியேற வேண்டும் : குற்றாலத்தில் எச்.ராஜா பேட்டி

புதன் 10, அக்டோபர் 2018 2:06:21 PM (IST)


தாமிரபரணி புஷ்கர விழாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தி.மு.க.,வில் இருந்து ஹிந்துக்கள் வெளியேற வேண்டும் என குற்றாலத்தில் பா.ஜ.க.,தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறினார்.

குற்றாலத்தில் தென்காசி சட்டமன்ற பாஜக., வாக்குசாவடி கமிட்டி பொறுப்பாளர்கள் பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது:- எங்கெல்லாம் ஹிந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் சுதந்திரமாக வாழ முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இது, வன்மையாகக் கண்டிக்கத்தக்க விஷயம்.

செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கல்லெறிந்து கலவரத்தில் ஈடுபட்டது முஸ்லிம்கள். ஆனால் இந்துக்கள் பலரே குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டுள்ளனர். வெளியில் வர முடியாத நிலை உள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் வெளியே வந்துவிட்டார்கள். தமிழகத்தில் எந்த  ஹிந்துப் பண்டிகையாக இருந்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும், எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கும்,  தலைமை தாங்குவது திமுக.,வுக்கு வழக்கமாகி விட்டது. ஆனால் இந்து விரோத திமுக., மட்டுமே தொடர்ந்து இந்துப் பண்டிகைகளுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

இன்று திமுக., மதிமுக., கம்யூனிஸ்ட்கள், மனித நேய மக்கள் கட்சி என்று பலரும் ஆட்சியரிடம் சென்று தாமிரபரணி புஷ்கரம் நடத்தக் கூடாது என்று மனு கொடுத்தார்கள். தயவு செய்து, இந்தக் கட்சிகளில் இருக்கும் குறிப்பாக திமுக.,வில் இருக்கும் ஹிந்துக்கள் கட்சியில் இருந்து வெளியில் வாருங்கள். நம்மை அவமானப் படுத்துகின்ற, ஹிந்து மதத்தைக் கேவலப் படுத்தும் கட்சியாக திமுக., இருந்து வருகிறது. தாமிரபரணி புஷ்கரம் வழிவழியாக நடந்துவருவதுதான். நதிகளை கொண்டாடுவதும், சுத்தப் படுத்தி சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதும் தான் புஷ்கரத்தின் நோக்கம்.

ஆனால் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில்  உள்ளவர்கள் இதற்கு எதிராக செயல்படுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. எனவே தாமிரபரணி புஷ்கரத்துக்கு சிறப்பு ரயில்கள் விடப்படும் என்று தென்னக ரயில்வே மேலாளர் சொல்லியிருக்கிறார். அதுபோல் மாநில அரசும் சுறுசுறுப்பாக செயல்படவேண்டும். நாட்கள் குறைவாகவே உள்ளன. பணிகளை அரசு முடுக்கி விட வேண்டும். மேலும் இந்து சமய அறநிலைய இணை ஆணையர் பரஞ்சோதி தீர்த்தவாரிக்கு சுவாமி விக்ரகங்களை கொண்டு வருவது ஆகம விரோதம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் இவரே 2015ல் சென்னை கடற்கரை தீவுத்திடலில் நடைபெற்ற அரசு கண்காட்சிக்கு அங்குள்ள புகழ்பெற்ற 28 கோயில்களில் இருந்து உற்ஸவ விக்ரஹங்களை எடுத்து வருமாறு உத்தரவிட்டார். தெய்வச் சிலைகளை காட்சிப் பொருளாகக் கருதுவது மிகத் தவறு. அது ஆகம விரோதம் இல்லையா? எனவே பரஞ்சோதி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்து அறநிலையத்துறை இந்து மரபுகளை நம்பிக்கையை அழிக்கும் துறையாகசெயல்படுகிறது என்பதற்கு பரஞ்சோதியே உதாரணம். 2015ல் பரஞ்சோதி செய்த சட்ட விரோத செயலுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது கோயில் தரிசனக் கட்டணத்தில் ஊழல் நடந்திருக்கிறது என்று ஆய்வு மேற்கொண்டு மாவட்ட நீதிபதிகள் அவர்களின் ஆய்வறிக்கையில் சொல்லியிருக்கிறார்கள். உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கையில் சொல்லியிருப்பதைத்தான் தொடர்ந்து நாங்களும் சொல்லி வருகிறோம். தமிழகத்தில் இருப்பது போல் கோயில்கள் கிடையாது, சொத்துகளும் கிடையாது. முன்னாள் முதல்வர் எம்,.ஜி.ஆர்., 1985ல் அவர் ஹிந்து ஆலயங்கள் நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு கமிட்டி போட்டார். குன்றக்குடி அடிகளார் தலைமையில் போட்ட அந்தக் கமிட்டி கொடுத்த அறிக்கையில் உள்ள பரிந்துரை என்னவென்றால், ஹிந்து ஆலயங்கள் ஆன்றோர் சான்றோர் அடங்கிய தனித்தியங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப் பட்டது. ஆனால், எம்.ஜி.ஆர்.க்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால், இந்த பரிந்துரையின் அடிப்படையில் இது உடனே அமல் படுத்தப் படவில்லை. அது இன்றளவும் கிடப்பில் போடப்படுள்ளது.

அப்போதே எடுக்கப்பட்ட முடிவு. ஆனால் இந்த அரசு, அதை செய்ய முன்வர வேண்டும். அது செயல்படுத்தப்பட்டால், இந்த அளவுக்கான ஹிந்து விரோத நடவடிக்கைகள், சீரழிவு நடக்காது. ஒரு பெரும்பான்மை சமுதாயத்தின் வழிபாட்டு உரிமைகளை மறுக்கின்ற இந்த செயல் கண்டிக்கத் தக்கது. ஹிந்து அறநிலையத்துறை ஏதாவது ஒரு கோயில் கட்டியிருக்கிறதா? ஆனால் 8 ஆயிரம் கோயில்களை பாழாக்கியிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.அப்போது அவருடன் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. கலிவரதன், நெல்லை மாவட்ட தலைவர் குமரேசசீனிவாசன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் அன்புராஜ், தென்காசி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பாலகுருநாதன், குற்றாலம் நகர தலைவர் செந்தூர்பாண்டியன், குற்றாலம் துணைத்தலைவர் திருமுருகன், பிலவேந்திரன், தென்காசி நகரத்தலைவர் திருநாவுக்கரசு, செங்கோட்டை நகரத்தலைவர் மாரியப்பன், ராஜ்குமார், கருப்பசாமி, சங்கரசுப்பிரமணியன், ஈஸ்வரன், குத்தாலிங்கம், உட்பட பலர் உடன் இருந்தனர். 


மக்கள் கருத்து

ராஜாOct 11, 2018 - 12:08:22 PM | Posted IP 162.1*****

டேய் பொறி உருண்டை கோஷ்டிகளா..எதையாவது கொளுத்தி போடாதீங்க டா

தமிழன்Oct 11, 2018 - 11:15:18 AM | Posted IP 172.6*****

ராஜா அவர்களின் எண்ணம் நிச்சயம் நிறைவேறும்.... வரும் தேர்தலில் ஹிந்து விரோத கட்சிகளுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்....

உண்மைOct 10, 2018 - 08:05:51 PM | Posted IP 162.1*****

இந்து அறநிலையத்துறை மீது குற்றம் சுமத்துவதற்காகவே இந்து ஆலயங்களில் தீ வைக்கப்படுகிறது.

MurugeshOct 10, 2018 - 07:08:29 PM | Posted IP 162.1*****

Muthalla naaye Nee Tamil natta vittu po. Appathan naanga ottumaya irukkamudiyum..

ராமநாதபூபதிOct 10, 2018 - 04:50:37 PM | Posted IP 162.1*****

இப்படியே பேசி பேசி நீ தான் நாசமா போகப்போற. கூடவே உன் கட்சியும் தான்

சாமிOct 10, 2018 - 03:44:29 PM | Posted IP 141.1*****

நிலைமை அப்படிதான் இருக்கு - ஒருவனும் திமுகவுக்கு ஓட்டு போடும் மனநிலையில் இல்லை

K.hari haranOct 10, 2018 - 03:37:55 PM | Posted IP 162.1*****

தம்பிக்கு எந்த வூரு

MANOOct 10, 2018 - 03:36:45 PM | Posted IP 141.1*****

ஐயா என்ன சொல்லறீங்க

சுந்தரன் தெய்வேந்திரன்Oct 10, 2018 - 03:35:29 PM | Posted IP 162.1*****

பொழைக்க வந்தவன் நாட்டாமை பன்றான். சில பன்னாடை அடிமைகள் சுத்தி நிக்குது. வெக்கமா இல்ல. எல்லா இந்துவும் பூணூல் போடலாமா? எல்லா ஜாதிக்காரனும் பூஜாரி ஆகலாமா?

உண்மைOct 10, 2018 - 02:51:01 PM | Posted IP 162.1*****

ஆமா அப்பத்தான் ஈஸியா சிலைகளை கொள்ளையடிக்க முடியும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory