» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருமண்டல தேர்தல் : எஸ்.டி.கே ராஜன் அணி வெற்றி

புதன் 10, அக்டோபர் 2018 8:52:53 PM (IST)தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல் நடந்தது. இதில் எஸ்.டி.கே ராஜன் அணியை சேர்ந்தவர்கள் மகத்தான வெற்றி பெற்றனர். 

தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல இறுதிக்கட்ட 10வது பெருமன்ற தேர்தல் நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் நேற்று (செவ்வாய்) நடந்தது. திருமண்டல பேராயர் தேவசகாயம் தலைமை வகித்தார். தூய யோவான் பேராலய தலைமைகுரு எட்வின் ஜெபராஜ் ஆரம்ப ஜெபம் செய்தார். குருவானவர் ஆசீர் சாமுவேல் வேதபாடம் வாசித்தார்.  இதனை தொடர்ந்து தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல் நடந்தது. இதில் எஸ்.டி.கே ராஜன் அணியை சேர்ந்தவர்கள் மகத்தான வெற்றி பெற்றனர். உபதலைவராக குருவானவர் தேவராஜ் ஞானசிங், குருத்துவ செயலராக மோசஸ் ஜெபராஜ், லே செயலராக எஸ்.டி.கே ராஜன் ஆகியோரும் பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றனர். 

லே செயலர் பதவிக்கு போட்டியிட்ட எஸ்.டி.கே ராஜன் 352 ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பேராசிரியர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் 51 ஓட்டுக்களை பெற்றுள்ளார். திருமண்டல பொருளாளராக பொன்துரைராஜ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  செயற்குழு உறுப்பினராக டேனியல் எட்வின் வெற்றி பெற்றார்.  35வயதிற்குட்பட்டதில் ஜோசப்ஜேசன் தர்மராஜ் ஏகமனதாக வெற்றி பெற்றார். சேகர ஊழியர் செயற்குழு உறுப்பினராக ஜெயசீலன் ஜெசுதுரை, மாணிக்கராஜ் ஆகியோரும், திருமண்டல ஊழியர் செயற்குழு உறுப்பினராக அருள்ஜோதி கிருபா, ஜாபிந்த், தேவசகாயம் பால்தங்கராஜ் ஆகியோரும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். லே செயற்குழு உறுப்பினராக செல்லப்பாண்டியன், குணசீலன் தங்கத்துரை, ஜெயக்குமார் ரூபன் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர். தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம் சார்பில் சினாட் பேரவைக்கு 6குருமார்கள், 11 லே உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தலில் மீண்டும் எஸ்.டி.கே ராஜன் அணியே வெற்றி பெற்று திருமண்டலத்தை கைப்பற்றியுள்ளது. முன்னதாக ஆலயத்தில் பரிசுத்த நற்கருணை ஆராதனை நடந்தது. இதில் திருமண்டல குருமார்கள், பெருமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், ஆசிரிய, ஆசிரியைகள், சேகர ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


சாத்தான்குளம் குணசீலன் 4முறையாக வெற்றி

தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல நிர்வாகக்குழு  உறுப்பினர் தேர்தலில் சாத்தான்குளம் குணசீலன் 4முறையாக வெற்றி பெற்றதையட்டி அவர், பேராயர் தேவசகாயம், மற்றும் லே செயலாளர் ராஜன் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார்.இதில் திருமண்டல நிர்வாகக்குழு உறுப்பினர் பொதுப்பிரிவில் 3பேர் தேர்வு செய்யப்பட உள்ள பதவிக்கு 5பேர் போட்டியிட்டனர். அதில் சாத்தான்குளம் குணசீலன், செய்துங்கநல்லூர் ஜெயக்குமார் ரூபன், தூத்துக்குடி சி.த. செல்லப்பாண்டியன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல தேர்தலில் சாத்தான்குளம் குணசீலன் தொடர்ந்து 4வது முறையாக திருமண்டல நிர்வாகக்குழு உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். நிர்வாகக்குழு உறுப்பினராக வெற்றி பெற்ற குணசீலன், திருமண்டல பேராயர் தேவசகாயம், திருமண்டல லே செயலர் எஸ்.டி.கே. ராஜன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் நிர்வாக்குழு உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள குணசீலனுக்கு சாத்தான்குளம் டாக்டர் ஆசீர்வாத மனோகரன் மற்றும் திருமண்டில பெருமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து

ஜெ ஜெOct 11, 2018 - 11:17:54 AM | Posted IP 162.1*****

பைபிள் கையில் இல்லாத ஊழியர்கள். இவர்கள் கிறிஸ்துவுக்காக என்ன செய்வார்கள்.? எல்லாம் பதவி ஆசை, சுகம், கெத்து.

DavidOct 11, 2018 - 10:46:49 AM | Posted IP 141.1*****

பிஷப் தனக்கு வேண்டியர் & தனது ஊரு காரர்களை நிறைய பதவிகளை கொடுத்து உள்ளார்

உண்மைOct 10, 2018 - 11:29:10 PM | Posted IP 162.1*****

செய்தியை தப்பு தப்பா போட்டுருக்கிங்கலே ஏன்

தமிழ்ச்செல்வன்Oct 10, 2018 - 09:37:19 PM | Posted IP 141.1*****

திருமண்டலத்தில் திடீர் திடீரென்று என்னவெல்லாமோ நடக்கிறது. பிஷப் தனது மனைவியை DC மெம்பராக நாமினேஷன் செய்து கொண்டார். அது திருமண்டல வரலாற்றில் இதுவரை எந்த பிஷப்பும் செய்யாத ஒரு மாபெரும் தவறு என்று நினைத்து கொண்டிருக்கும்போது திடீரென பிஷப் தனது மனைவி நாமினேஷனை வாபஸ் பெற்றுக்கொண்டு கோரம்பள்ளத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற வாங்கி மேலாளர் பொன்துரைராஜை நாமினேஷன் செய்து கொண்டார். அவரை திருமண்டல பொருளாளராக தேர்வு செய்து கொண்டார்கள். பொருளாளர் பதவி நமக்குத்தான் என எதிர்பார்த்து கொண்டிருந்த இரண்டு பேர் இப்போது தலைசுற்றி கிடக்கிறார்கள். பிஷப்பின் இந்த தொலைநோக்கு திட்டத்தை பார்த்து DC மெம்பர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். ஒரு சில பேரை நம்ப வைத்து குப்புற கவிழ்த்தும் விட்டார்கள். பாவம் அவர்கள். என்ன செய்ய முடியும்? நீங்கள் அரசியல் கற்று கொள்ள வேண்டுமானால் தூத்துக்குடி திருநெல்வேலி CSI பாதிரியார்களிடம் போய் கற்று கொண்டு வாருங்கள் என்று கருணாநிதி தனது கட்சி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சொன்னதுதான் ஞாபகத்திற்கு வருகிறது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory