» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் தென்காசி வருகை : பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்

வியாழன் 11, அக்டோபர் 2018 11:02:48 AM (IST)


குற்றாலம், பாபநாசத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் தென்காசி வந்தடைந்தார்.

தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் நேற்றிரவு சென்னையிலிருந்து ரயிலில் கிளம்பி இன்று காலை சுமார் 9.30 மணிக்கு தென்காசி ரயில் நிலையம் வந்தடைந்தார். அங்கு அவரை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் வரவேற்றார். அங்கிருந்து குற்றாலம் அரசு விருந்தினர் மாளிகை செல்லும் ஆளுனர் ஓய்வெடுத்து விட்டு பின்னர் பாபநாசம் சென்று புனித நீராடுகின்றார்.

அதை தொடர்ந்து துறவியர் மாநாட்டை துவக்கி வைக்கும் அவர் பின்னர் திருநெல்வேலி  வர உள்ளார். ஆளுனர் வருகையின் போது ஐஜீ சண்முக ராஜேஷ்வரன், திருநெல்வேலி சரக டிஐஜி கபில்குமார் சரத்கர், திருநெல்வேலி மாவட்ட எஸ்பி அருண்சக்திகுமார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory