» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மதிமுக பிரமுகர்கள் இல்லத்தில் வைகோ நலம் விசாரிப்பு

வியாழன் 11, அக்டோபர் 2018 12:41:16 PM (IST)

சுரண்டை பகுதிகளில் மறைந்த மதிமுக பிரமுகர்கள் வீட்டிற்கு சென்று வைகோ ஆறுதல் கூறினார்.

நெல்லை மாவட்டம் சுரண்டையை சேர்ந்த மதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏடி நடராஜன் தந்தை தெட்சனாமூர்த்தி , மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேஷ்வரன் தந்தை பொன்னுச்சாமி  ஆகியோரின் மறைவை முன்னிட்டு  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களது வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நகர செயலாளர் துரைமுருகன் வீட்டிற்க்கு சென்று அவரது தகப்பனார் தனுஷ்கோடி ஆசிரியரிடம் உடல் நலம் விசாரித்து உரையாடினார்.

அவருடன் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ராமகிருஷ்ணன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் கல்லத்தியான், ஓன்றிய செயலாளர்கள் மருதச்சாமிபாண்டியன், ஆறுமுகச்சாமி, வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ், கோவிந்த பாண்டியன், வாணி முருகன், சுரண்டை அழகுதுரை, கலிங்கபட்டி கங்காதரன், கீழச்சுரண்டை திருமலை, ஊடக பிரிவு சுடலை ராஜ், தங்கராஜ், வீனஸ் கதிரவன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory