» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாபநாசத்தில் ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் புனித நீராடினார்

வியாழன் 11, அக்டோபர் 2018 2:14:49 PM (IST)

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி புஷ்கர விழாவை ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்து புனித நீராடினார்.

தாமிரபரணி புஷ்கர விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை 8.50 மணிக்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் தென்காசிக்கு வந்தார். இதை தொடர்ந்து ஆளனர் குற்றாலத்துக்கு சென்றார்.

அங்குள்ள விருந்தினர் மாளிகையில் அவர் சிறிதுநேரம் ஓய்வெடுத்தார். இதன்பிறகு அவர் பாபநாசம் புறப்பட்டு சென்றார். பாபநாசம் வந்த கவர்னருக்கு துறவியர்கள், பண்டிதர்கள் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து ஆளுனர் பாபநாசம் கோவில் முன்புள்ள இந்திரகீல தீர்த்தப்படித்துறையில் புனித நீராடினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory