» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மாணவர்கள் மீதான தடியடியை கண்டித்து போராட்டம்

வியாழன் 11, அக்டோபர் 2018 5:48:38 PM (IST)


நெல்லையில் மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து  சுரண்டை காமராஜர் அரசு கல்லூரி மாணவர்கள்.  போராட்டம் நடத்தினார்கள்.

நெல்லையில் தமிழ் வழி தேர்வு எழுத அனுமதி கேட்டு போராடிய மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் தேர்வு எழுத அபராத  கட்டண உயர்வை கண்டித்தும் தமிழ் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டியும் சுரண்டை காமராஜர் அரசு கல்லூரி மாணவ மாணவியர்  வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினார்கள். சுட்டெரிக்கும் வெயிலில் அமர்ந்து போராட்டம் நடத்திய மாணவர்கள் நெல்லை பல்கலையில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்தும் மதிப்பெண் பட்டியலில் குளறுபடி நடப்பதை கண்டித்தும், வருகை பதிவு குறைந்த மாணவர்களுக்கான அபராத தொகை உயர்வை குறைக்க கூறியும் தமிழில் தேர்வு எழுத அனுமதிக்க கோரியும் கோசங்கள் எழுப்பினர். மாணவர்களின் போராட்டத்தை முன்னிட்டு சுரண்டை எஸ்ஐக்கள் கவிதா, மாரிமுத்து தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory