» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்பாட்டம்

வியாழன் 11, அக்டோபர் 2018 6:46:14 PM (IST)திருநெல்வேலியில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.

பாளை ஜவகர் திடலை அடுத்துள்ள கட்டபொம்மன் கூண்டு கட்டும் பணிமனையில் பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கேண்டீனில் சரியான நேரத்திற்கு உணவுகள் வழங்கபடுவதில்லையாம். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தால் உங்களது வீட்டில் இருந்து உணவு கொண்டு வாருங்கள் என அதிகாரி கூறுகிறாராம். இது தவிர இந்த பணிமனையில் உள்ள உபகரணங்கள் மிக பழமை வாய்ந்தது எனவும் தற்போது பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு போக்குவரத்து தொழிலாளர் சங்க பொருளாளர் மணி தலைமை தாங்கினார், சங்க துணை பொது செயலாளர் பாலசுப்பிரமணியன், காசிராஜன், தொமுச ஐயப்பன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர் , ஆர்பாட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory