» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ராபேல் விமான ஊழல் குறித்து மக்களிடம் பிரச்சாரம் : காங்கிரஸ் செயற்குழு தீர்மானம்

வெள்ளி 12, அக்டோபர் 2018 10:19:09 AM (IST)


ராபேல் போர் விமான ஊழலை மக்களுக்கு தெரிவிக்க பிரச்சாரம் செய்வது என காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் பழனி நாடார் தலைமையில் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர்கள் சண்முகவேல், பாவநாசம், சிவராமகிருஷ்ணன், முகமது உசைன், பிசிசி உறுப்பினர்கள் மாடசாமி, சட்டநாதன், ஜேம்ஸ், நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி நகர தலைவர் காதர் மைதீன் வரவேற்றார், கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராக அனைத்து வாக்குசாவடிகளிலும் 10 நபர்கள் கொண்ட முகவர்களை நியமித்து தேர்தல் பணியாற்றுதல், வரும் 15ம்தேதி நெல்லைக்கு வருகை தரும் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத்ற்கு சிறப்பான வரவேற்பு வழங்கல், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் சொத்துவரி, வீட்டுவரி, குடிதண்ணீர் வரி உயர்வை ரத்து செய்ய கோரியும், ராபேல் போர் விமான ஊழலை கண்டித்தும் இந்த மோசடிகளை மக்களுக்கு தெரியபடுத்த பொதுகூட்டங்கள், தெருமுனை பிரச்சாரங்களை நடத்தவும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி பிரதமராக உழைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட செயலாளர்கள் கணேசன், சக்திவேல், சந்தணராஜ், முத்துபாண்டியன், கமர்தீன், மிராசுமாடப்பாண்டியன், ராமச்சந்திரன், வட்டார தலைவர்கள் வெங்கடாசலபெருமாள், அன்வர்அலி, மூக்கையா, தங்கரத்தினம், முத்தையா, ஏகஜெகன், முருகையா, முருகன், பன்னீர்துரை, சுந்தர்ராஜ், ஆனந்த், நகர தலைவர்கள் ஜெயபால்,உ செல்வராஜ், சம்சுதீன், முருகன், அபுபக்கர் சித்திக், பழனிசாமி, அய்யாத்துரை அமைப்பு செயலாளர்கள் சித்திரைநயினார், வேங்கடலட்சுமி, ஆறுமுகம், ராமராஜ், பன்னீர் காமராஜ், சத்தியமூர்த்தி, சண்முகம், தவசிமுத்து, பாலசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணைத் தலைவர் திருஞானம் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory