» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சென்ட்ரிங் சிலாப் உடைந்து கொத்தனார் சாவு

வெள்ளி 12, அக்டோபர் 2018 10:28:52 AM (IST)

சுரண்டையில் சென்ட்ரிங் சிலாப் உடைந்து வாலிபர் பரிதாபமாக பலியானார்.

நெல்லை மாவட்டம் சுரண்டை வரகுணராமபுரத்தை சேர்ந்தவர் மாடசாமி மகன் ராமகிருஷ்ணன்(18). கொத்தனார் வேலை பார்த்து வரும் இவர் நேற்று மாலை ஓரு கட்டிடத்தில் அடிக்கப்பட்டிருந்த சென்ட்ரிங் சிலாப் பலகையை பிரித்துள்ளார் அப்போது சரியாக சேராத சிலாப் அவரது தலையின் மீது விழுந்துள்ளது. இதனால் அலறி துடித்த ராமகிருஷ்ணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே ராமகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து எஸ்ஐ கவிதா வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory