» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

விவசாயிகள் சிறப்பு பயிர்களை பயிர் செய்ய வேண்டும் : திருநெல்வேலி ஆட்சியர் வேண்டுகோள்

வெள்ளி 12, அக்டோபர் 2018 12:23:01 PM (IST)


சிறப்பு ஒட்டு பயிர் செய்து விவசாயிகள் பலன் அடைய வேண்டுமென நாற்று பண்ணையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்,பார்வையிட்டு, ஆய்வு செய்த போது கூறினார்.

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில் ஒட்டுசேர் பிடி முறையில் உற்பத்தி செய்யப்படும் நெட்டை, குட்டை மற்றும் குட்டை, நெட்டை தென்னங்கன்றுகள் உற்பத்திய செய்யப்படும் பணிகளை  திருநெல்வேலி ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் இன்று (10.10.2018) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது-

நெட்டை, குட்டை தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்வதற்கு மேற்கு கடற்கரை நெட்டை மரங்கள் பெண் மரமாகவும், மலேயன் ஆரஞ்சு குட்டை ஆண் மரமாகவும் பயன்படுத்தி ஓட்டுசேர்ப்பு பணிகள் நடைபெறுகிறது. பெண் மரத்தில் பூம்பாளை வெடித்து 14 நாட்கள் கழித்து பாளைகளிலுள்ள ஆண் பூக்கள் அனைத்தையும் உதிர்த்துவிட்டு 60ஓ30 செ.மீ அளவுள்ள காடா துணிப்பையால் மூடி விடவேண்டும். பின்னர், 45 முதல் 60 நாட்கள் மணல் பதனம் மேற்கொள்ளப்படுகிறது. அதன் பின்பு நடவு பாத்திகளில் விதை நெற்றுகள் நடவு செய்யப்பட்டு, ஆறு மாத காலம் பராமரிக்கப்படுகிறது. ஆறு மாதங்கள் கழிந்த நிலையில் தரமான தென்னங்கன்றுகள் தேர்வு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருந்திரளான விவசாயிகள் மட்டுமின்றி அருகாமையில் உள்ள மாவட்ட விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அதிகப்படியான தேவைகள் விவசாயிகளிடமிருந்து வரப்பெறுகின்றன. இந்த தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த சிறப்பு ஒட்டுகளை மேலும், விவசாயிகள் கூடுதலாக உற்பத்தி செய்து, வழங்கப்படும் இந்த அறிய வாய்ப்பினை திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் பெற்று, தங்களது வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் உயர்த்தி பயன்பெற வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

இந்த ஆய்வின் போது, வேளாண்மைத் துறை இணை இயக்குர் செந்தில்முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்திராணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், வேளாண் அலுவலர், விதை பண்ணை மேலாளர், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory