» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ராமர்கோவில் கட்ட பாராளுமன்றத்தில் சட்டதிருத்தம் : நெல்லையில் வி.எச்.பி பேட்டி

வெள்ளி 12, அக்டோபர் 2018 1:49:04 PM (IST)

கும்பமேளாவிற்குள் ராமர்கோவில் கட்ட பாராளுமன்றத்தில் சட்டதிருத்தம் கொண்டு வரவேண்டும் என நெல்லையில் வி.எச்.பி. அகில உலக தலைவர் விஸ்னு சதாசிவ கோக்ஜே பேட்டியளித்தார்.

தாமிரபரணி புஷ்கர விழாவில் கலந்து கொள்ள நெல்லைக்கு வி.எச்.பி. அகில உலக தலைவர் விஸ்னு சதாசிவ கோக்ஜே வந்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது,வரும் ஜனவரி 31ம் தேதி நடக்கும் அலகாபாத் கும்பமேளாவிற்குள் ராமர்கோவில் கட்ட பாராளுமன்றத்தில் சட்டதிருத்தம் கொண்டு வரவேண்டும். தற்போது உச்ச நீதிமன்றம் அளித்த சபரிமலை, ஓரினச்சேர்க்கை உள்ளிட்ட மூன்று தீர்ப்புகளையும் மறு ஆய்வு செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory