» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு

புதன் 17, அக்டோபர் 2018 12:59:32 PM (IST)

நெல்லையில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது.

நாளை மற்றும் நாளை மறுநாள் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு  நெல்லை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இன்று மல்லி ,பிச்சி பூக்களின் விலை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் பூக்களின் விளைச்சல் குறைவாக இருப்பதால் தேனி, ஒசூர் கம்பம் போன்ற பகுதிகளில் இருந்து தான் வரத்து உள்ளது இதுவும் விலையேற்றத்திற்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இருந்தாலும் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.இதனால் பூமார்க்கெட் களைகட்டி  உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd






Tirunelveli Business Directory