» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சென்னை, காேயமுத்தூருக்கு சிறப்பு அரசு பேருந்துகள் : சுரண்டையிலிருந்து இயக்கம்

புதன் 17, அக்டோபர் 2018 5:24:08 PM (IST)

சுரண்டையிலிருந்து சென்னை கோவைக்கு சிறப்பு அரசு பஸ் ஞாயிறு இயக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் சுரண்டை வளர்ந்து வரும் வணிக நகரமாகும். சுரண்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தொடர் விடுமுறை நாட்களில் சொந்த ஊரான சுரண்டை பகுதிக்கு வந்து செல்வது வழக்கம். இப்படி  திரும்பி  செல்லும் அரசு அலுவலர்கள், மாணவ மாணவிகள் பிற தனியார் கம்பெனிகளில் வேலை பார்க்கும் தொழிலாளிகள் நலன் கருதி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் சிறப்பு பஸ்கள் சென்னை மற்றும் கோவைக்கு ஒவ்வொரு வருடமும் இயக்கப்பட்டு வருகின்றன. 

அதன்படி பூஜை விடுமுறை முடித்து செல்வதற்க்கு வசதியாக வரும் ஞாயிறு (21ம்தேதி) மாலை 5 மணிக்கு சுரண்டையிலிருந்து சென்னைக்கும், இரவு 7மணிக்கு சுரண்டையிலிருந்து கோவைக்கும் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவு சுரண்டை தற்காலிக பஸ் நிலையத்தில் செய்யப்படுகின்றது. இதே போன்று தீபாவளி விடுமுறை முடித்தும் செல்ல வசதியாக சென்னை மற்றும் கோவைக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்புக்கு பஸ் நிலைய அலுவலர்கள் செல்போன் எண்கள் 9444762029, 9952195015, 9629211549.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory