» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் : திருநெல்வேலி ஆட்சியர் அறிவிப்பு

புதன் 17, அக்டோபர் 2018 6:29:57 PM (IST)

மகளிர் மாற்றுத் திறனாளிகள் அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்யலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார். 

திருநெல்வேலி மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனத் திட்டம் 2017-2018-க்கு விண்ணப்பம் செய்யாத மாற்றுத் திறனாளிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் வாகனம் வழங்கிட மானியத்தினை உயர்த்தி அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனவே, பணிக்கு செல்லும் மகளிர் மாற்றுத் திறனாளிகள் தங்கள் பகுதியிலுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியரக மகளிர் திட்ட அலுவலகத்தில், அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ் மானியம் பெற்றிட உடன் விண்ணப்பம் செய்யலாம்.  

விண்ணப்பிப்பவர்கள் வயது 18 முதல் 40 வயதிற்க்கு உட்பட்டவராகவும், ஆண்டு வருமானம் ரூ. 2,50,000ஃ க்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் இருசக்கர வாகனம் பெறும் மகளிர் மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு அதிகபட்சமாக ரூ.31,250 மானியமாக உடன் வழங்கப்படும். மேலும் விபரங்களை அறிந்து கொள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் முகவரியில் உடனடியாகத் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

திட்ட இயக்குநர், மாவட்ட இயக்கமேலாண்மைஅலகு,காவல் ஆணையர் அலுவலகபழையகட்டிடம் முதல் தளம், மாவட்டஆட்சியர் அலுவலகவளாகம், கொக்கிரகுளம்,திருநெல்வேலி - 627 009.தொலைபேசிஎண் - 0462 - 2500302. மின்னஞ்சல் முகவரி - dpiu_tnv@yahoo.com. என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory