» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை மாவட்டத்தில் விமானநிலையம் அமையுமா ? : பொன்ராதாகிருஷ்ணன் பதில்

புதன் 17, அக்டோபர் 2018 7:48:30 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க பூகோள அமைப்பு சரியாக அமையவில்லை என மத்திய இணையமைச்சர் பாென். ராதாகிருஷ்ணன் கூறினார்.

சுற்றுலா தலமான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பாெதுமக்கள், மற்றும் பக்தர்கள் வருகை தர வசதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இடங்கள் அமைக்க இடம் ஆய்வு செய்யப்பட்டது. இன்று திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளம், பழவூர், காவல்கிணறு உள்ளிட்ட பகுதிகளில் மத்தியஅமைச்சர் பொன் . ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சாமிதோப்பு பகுதியில் விமான நிலையம் அமைக்க சரியான இடம் அமையவில்லை. 

எனவே கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள கூடன்குளம், பழவூர், காவல்கிணறு உள்ளிட்ட பகுதிகளில் விமான நிலயைம் அமைக்க ஆய்வு செய்யப்பட்டது. அடுத்த கட்டமாக விமானத்துறை அதிகாரிகளிடம் பேசி முடிவெடுக்கப்படும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory