» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இருட்டுகடை அல்வா விற்பனை சூடுபிடித்தது : தாமிரபரணி புஷ்கர விழா எதிரொலி

புதன் 17, அக்டோபர் 2018 8:01:23 PM (IST)

தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி, திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வாவை வாங்குவதற்கு கூட்டம் அலைமோதுவதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி என்றதும் அனைவரின் நினைவுக்கும் வருவது அல்வா தான். தாமிரபரணி நீரினால் தயாரிக்கப்பட்டபோது, அல்வா-வின் சுவை அதிகரிக்கவே நெல்லையும், அல்வாவும் பிரிக்க முடியாத பொருளாகிவிட்டன. நெல்லையில் பல கடைகள் அல்வா விற்பனையில் ஈடுபட்டாலும், நெல்லையப்பர் கோவில் எதிரே ஒரு சிறிய கடையில் விற்கப்படும் அல்வாவே உலகப்பிரசித்தி பெற்றது. அல்வா பிரியர்களால் இருட்டுக்கடை என பெயர்சூட்டப்பட்ட இந்தக் கடையில் தற்போது கூட்டம் அலைமோதுகிறது. இவர்களில் பெரும்பாலான வர்கள் தாமிபரணி புஷ்கர விழாவில் பங்கேற்க வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory