» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

வியாழன் 18, அக்டோபர் 2018 12:52:14 PM (IST)

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என திருநெல்வேலி ஆட்சியர் ஷில்பா பிரபாகர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக ஆண்டுதோறும் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுடன் ரூ.1,00,000 பொற்கிழியும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும்,  தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருதுக்கான 2018 ஆம் ஆண்டின் விருதாளர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு,  மக்களின் வாழ்க்கைத் தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றம் சாதனைகள் ஆகியவற்றுடன் விண்ணப்பதாரரின் பெயர், சுயவிவரம் மற்றும் முழு முகவரியுடன் வரும் 31ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியருக்கு  விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory