» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வீடு புகுந்து மாமியார்-மருமகளிடம் செயின் பறிப்பு

வெள்ளி 19, அக்டோபர் 2018 10:53:41 AM (IST)

சுரண்டை அருகே வீடு புகுந்து மாமியார்-மருமகளிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சாம்பவர் வடகரை அணைந்தபெருமாள் தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். கூலித் தொழிலாளி. அவருடைய மனைவி மின்னல்கொடி (36). இவருடைய மாமியார் கோமதியம்மாள். சம்பவத்தன்று இரவு 3 பேரும் கதவை பூட்டிவிட்டு, வீட்டின் உள்ளே தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் மர்மநபர் ஒருவர் கதவை உடைத்து உள்ளே நுழைந்தார். 

அப்போது மின்னல்கொடி உள்ளிட்ட 3 பேரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. உடனே அந்த மர்ம நபர் கோமதியம்மாள் கழுத்தில் கிடந்த சுமார் 2½ பவுன் சங்கிலியை நைசாக பறித்தார். பின்னர் மின்னல்கொடி கழுத்தில் கிடந்த 3¾ பவுன் சங்கிலியை பறிக்க முயன்றார். இதில் திடுக்கிட்டு கண்விழித்த மின்னல்கொடி அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தனது கைகளால் சங்கிலியை இறுக பிடித்துக் கொண்டு திருடன். திருடன். என கூச்சலிட்டுள்ளார்.
 
இதனால் சுதாரித்த மர்மநபர் தங்க சங்கிலியை வேகமாக பிடித்து இழுத்ததில், இரண்டு துண்டாக அறுந்து,ஒரு பகுதி மின்னல்கொடி கையிலும், சுமார் இரண்டரை பவுன் மர்ம நபர் கையிலும் சிக்கியது. உடனே ஜெயச்சந்திரன் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். அதற்குள் அந்த மர்ம நபர் 5 பவுன் நகையுடன் தப்பித்து ஓடி மறைந்து விட்டார். பல இடங்களில் தேடியும் மர்ம நபரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சாம்பவர் வடகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd





Tirunelveli Business Directory