» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தச்சை வேதிக் வித்யாஷ்ரம் பள்ளியில் வித்யாரம்பம் பூஜை

வெள்ளி 19, அக்டோபர் 2018 12:33:07 PM (IST)
நெல்லை தச்சநல்லூர் வேதிக் வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் பூஜை சிறப்பாக நடைபெற்றது. 

இதில் பள்ளி தாளாளர் செந்தில்பிரகாஷ், இயக்குநர் திலகவதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்நாளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து மகிழ்ந்தனர். அரிசியில் தங்கள் குழந்தைகளை எழுதச்செய்து பள்ளியில் சேர்த்தனர். தாளாளர் கூறுகையில் எங்கள் பள்ளியில் சிறந்த அனுபவமுள்ள ஆசிரியைகளை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் தாயுள்ளத்தோடு குழந்தைகள் கவனிக்கப்படுகின்றனர். 

நல்ல காற்றோட்டமான விசாலமான வகுப்பறைகளை கொண்டும் தொடுதிரை தொழில்நுட்பத்துடனும், சுத்தமான குடிநீர் மற்றும் மழலையர்கள் உடற்பயிற்சிகூடத்துடனும் தரமான கல்வி போதிக்கப்படுகிறது. அனைத்து பகுதிகளுக்கும் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் சோமசுந்தரி, பொது மேலாளர் ஜிபி அய்யர், மேலாளர் செல்வராஜ், மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மணாவியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory