» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பழவூர் கோவிலில் சாமி சிலை கொள்ளை வழக்கு : ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் விசாரணை

சனி 20, அக்டோபர் 2018 2:08:48 PM (IST)

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள பழவூர் கோவிலில் சாமி சிலை கொள்ளை வழக்கு தொடர்பாக ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் விசாரணை நடத்தினார்.

பணகுடி அருகே உள்ள பழவூரில் நாறும்பூநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு 13 ஐம்பொன் சிலைகள் கொள்ளை போனது. இது தொடர்பாக பழவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.பின்னர் இது தொடர்பான வழக்குகள், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கொள்ளைபோன சாமி சிலைகளை மீட்டார். 

இதில் நாறும்பூநாதர் கோவிலுக்கு சொந்தமான 9 சிலைகளும் மீட்கப்பட்டது. ஐம்பொன் சிலைகளில் தங்கத்தின் அளவு குறைவாக உள்ளது. இதனால் அதன் உண்மை தன்மைகள் பற்றி அறிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் இன்று பழவூருக்கு வந்தார். இதைத்தொடர்ந்து அவர் கோவில் நிர்வாகிகளிடமும், ஊர் முக்கிய பிரமுகர்களிடமும் விசாரணை மேற்கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory